Saabam

ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது அவனது முன்ஜென்ம வினை, அவனது முன்னோர்களின் வினை பொறுத்தே அமைகிறது. முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால் இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் அதர்ம வழியில் தாக்கப்படும்போது அவனுக்கு ஏற்பட்ட கோபத்தினால் அடிவயிற்றிலிருந்து வார்த்தை வெளிவருகிறது. இந்த வார்த்தையே
சாபமாக மாறுகிறது. இந்த சாபம் தனிப்பட்ட மனிதரை மட்டுமல்லாமல் அவருடைய சந்ததியையே
பாதிக்கும். இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாத சோதனைகளைச் சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு. நமது ஜாதகப்படி ஆராய்ந்து பார்த்து எந்த விதமான சாபம் உள்ளதோ அதற்கேற்ற வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

சாபங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

* ஒருசிலருக்கு வசதி வாய்ப்புகள் நன்றாக அமைந்து, வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது. அவர்களுக்கு முன்னோர்கள் சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர்.

* ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். என்னதான் வைத்திய முறைகளை கையாண்டாலும், ஆரோக்கிய குறைபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கும் சாபம் என்றுதான் சொல்வார்கள்.

* ஒருசிலர்  வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் காரியத் தடைகள் அடிக்கடி நேரும். குழந்தைகள் வாழ்வில் உயர்வு கிட்டாது. இதற்கெல்லாம் காரணம் முன்னோர்கள் சாபம் என்பதை அறியலாம்.

*ஒருசிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர். கற்றறிந்த பெரியவர்கள், வயோதிகர்கள் விடும் சாபம் சிலரை பாதிக்கலாம். எனவே தான் பிறர் கோபப்படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள்.

* ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோரை கவனிக்காமல் விட்டுவிட்டால் பெற்றோர்களின் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறும்

அங்ஙனம் ஏற்படும் சாபங்கள் விலக இறை வழிபாடுதான் தீர்வு.

*தாயின் சாபம் விலக, ஏகாதசி திதியில் ஏகாம்பரேஸ்வரரை முறையாக வழிபாடு செய்ய வேண்டும்.

* தந்தையின் சாபம் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும்.

* சுமங்கலி பெண்களின் சாபம் விலக, அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும்.

* சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும்.

* ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here