SA Chandrasekhar Meet Meera Mitun

தளபதி விஜய்யை தொடர்ந்து கண்டபடி விமர்சனம் செய்து வந்த மீரா மிதுனை நேரில் சந்தித்து உள்ளார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.

SA Chandrasekhar Meet Meera Mitun : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து இவரை ஒரு மாபியா எனவும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை ரசிக்க முயற்சி செய்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டி வந்தவர் மீரா மிதுன்.

இதனால் விஜய் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டிவிட்டு இன்னும் அடங்கிய பாடில்லை. விஜய் பற்றிய ரகசியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடப் போவதாகவும் கூறி வருகிறார் மீரா மிதுன்.

இப்படியான நிலையில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் மீரா மிதுனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதுபற்றி மீராமிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேங்க் யு எஸ் ஏ சந்திரசேகர் சார். விஜய் சுற்றியுள்ள மாபியா யார் என்ற ரகசியத்தைக் கூறினேன். நான் கூறிய அறிவுரைகளை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

எஸ் ஏ சந்திரசேகர் மீரா மிதுனை சந்தித்தது குறித்து வெளியான தகவலால் அவரை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1331056166013526016?s=19