அடுத்தடுத்து விஜய் பற்றிய கேள்விகளால் ஆத்திரமடைந்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். எக்கச்சக்கமான படங்களை இயக்கிய இவர் தளபதி விஜயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விஜய் மற்றும் சந்திரசேகர் என இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் பற்றி அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதனால் கடுப்பான எஸ் ஏ சி விஜய் பற்றி கேள்வி என்றால் நேராக போய் அவரிடம் கேளுங்கள் என ஆவேசப்பட்டுள்ளார்.