சங்கீதாவின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி பேசி உள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் திரையுலகில் அறிமுகமான இவர் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இன்று உச்ச நடிகராக உள்ளார்.

தற்போது விஜய் மற்றும் சந்திரசேகர் கருத்து வேறுபாடு காரணமாக பெரிய அளவில் தொடர்பு இல்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படியான நிலையில் சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றின் முதல் முறையாக தன்னுடைய மருமகள் சங்கீதா குறித்து பேசி உள்ளார்.

பிள்ளைகளை பார்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார். பள்ளிக்கு அழைத்துச் செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது என அனைத்திலும் கவனம் எடுத்து நடந்து கொள்வார். நான் என்னுடைய பேரனுக்கு ஏதாவது கொடுத்தால் கூட அவன் அவனுடைய அம்மாவின் அனுமதியில்லாமல் வாங்க மாட்டேன். அந்த அளவிற்கு சங்கீதா பிள்ளைகளை கட்டுப்பாட்டோடு நல்ல முறையில் வளர்த்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.