100 நாள் ஓடியது என சொல்வது எல்லாம் விளம்பரம் தான்‌. விஜயின் அந்தப் படம் ஃப்ளாப் என தெரிவித்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

SA Chandrasekhar About Once More Movie : தமிழ் சினிமாவில் தளபதி விஜய், சிம்ரன், சிவாஜி கணேசன், அஞ்சு அரவிந்த், சரோஜாதேவி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். இந்த படம் திரையரங்குகளில் 100 நாள் ஓடியதாக சொல்லப்பட்டது. ஆனால் இது ஒரு பிளாப் திரைப்படம் என 25 வருடங்களுக்குப்பிறகு கூறியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

100 நாள் ஓடியது எல்லாம் விளம்பரம்.‌. விஜய்யின் அந்தப் படம் ஃபிளாப், அதற்கு காரணம் இளையராஜாதான் ‌‌-எஸ் ஏ சந்திரசேகர் அதிர்ச்சி பேட்டி

இந்த படத்தை குறும் படம் போல இருப்பதற்காகத்தான் 12 பேர் குழுவுடன் சிம்லா சென்று இருந்தோம். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து நினைத்த இடத்திற்கெல்லாம் சென்று சுற்றிப் பார்ப்போம். தோன்றுவதை எல்லாம் படம் ஆக்குவோம். சரி இதற்கு இசை அமைக்கலாம் என இளையராஜாவை சென்று சந்தித்தபோது அவர் நல்லா இருக்கே இதை திரையரங்குகளில் வெளியிடலாமே என கூறினார். பிறகு இதனை இரண்டு மணி நேரமாக மாற்ற சில காட்சிகளை சேர்த்தோம். அதுதான் இந்தப் படம் தோல்வியடைய காரணம் ஆகிவிட்டது.

100 நாள் ஓடியது எல்லாம் விளம்பரம்.‌. விஜய்யின் அந்தப் படம் ஃபிளாப், அதற்கு காரணம் இளையராஜாதான் ‌‌-எஸ் ஏ சந்திரசேகர் அதிர்ச்சி பேட்டி

ஒரு மணி நேர படமாக வந்து இருந்தாலும் இந்த படம் வெற்றி அடைந்திருக்கும். இளையராஜாவின் தூண்டுதலின் பெயரில் திரைப்படம் ஆக்கினோம் என எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.