Sac About Master Release Date

மாஸ்டர் படத்தின் ரிலீஸின்போது என்பது குறித்த உண்மையை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் அவர்கள் உளறியது விஜய்யை வருத்தத்திற்குள்ளாக்கி உள்ளது.

SA Chandrasekhar About Master Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினர் பிரிட்டோ தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி கொரானா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் பேட்டி ஒன்று தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சஸ்பென்சாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் SAC இவ்வாறு கூறியுள்ளார்.

அதேபோல் விஜய் அரசியல் குறித்த வேலைகளை ரகசியமாக பார்த்து வந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்யின் மக்கள் இயக்கம் ஒரு நாள் நிச்சயம் அரசியல் இயக்கமாக மாறும் என கூறியிருந்தார்.

தான் ரகசியமாய் செய்து வரும் வேலைகளை தன் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் போட்டு உடைத்து விடுவது விஜய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.