S.Ve Shekher Tweet About Madhumitha Suicide Attempt | Bigg Boss | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
மதுமிதாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட நடிகரை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றியுள்ளனர்.

S.Ve Shekher Tweet : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து நடிகரும் அரசியல் தலைவருமான எஸ். வி சேகர் அவர்கள் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார், அந்த பதிவில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா⁉️ ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத் தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை.என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் போலீஸ் விசாரணை தேவை என்று கூறினாலும் பலர் எஸ். வி சேகரை தான் விமர்சனம் செய்து கமெண்ட் கொடுத்துள்ளனர்.

கமல்ஹாசன் அரசியல் ரீதியாக பாஜக-வை தாக்கி பேசியதால் எஸ். வி சேகர் இவ்வாறு பேசி வருகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.