S J Suryah Ask Share on Vaali Remake
S J Suryah Ask Share on Vaali Remake

அஜித்தை நம்பி போனி கபூர் ஒரு புதிய முயற்சியில் இறங்க அதற்கு எஸ் ஜே சூர்யா எதிர்பாராத ஷாக் கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

S J Suryah Ask Share on Vaali Remake : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் வினோத் தான் இயக்குகிறார்.

மேலும் போனி கபூர், அஜித் நடிப்பில் வெளியான வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்களின் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருந்தார். அஜித் கூறியதால் தான் அவர் வாலி படத்தின் உரிமையை வாங்கியதாக கூறப்பட்டு வருகிறது.

வலிமை என்னாச்சு?? ரிலீஸ் எப்போது?? – வினோத் தரப்பில் இருந்து வெளியான தகவல்!

இப்படியான நிலையில் எஸ் ஜே சூர்யா போனி கபூரை தொடர்பு கொண்டு வாலி படத்தில் எனக்கும் பங்கு உண்டு. 40 சதவீத பங்கிற்கான தொகையை நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போனி கபூர் யோசித்து சொல்வதாக கூறியுள்ளார். இதனை அறிந்த அஜித் ஷாக்காகி உள்ளார். எஸ் ஜே சூர்யா இப்படி செய்வார் என அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

வாலி படத்தின் இந்தி ரீமேக்கில் போனி கபூர் தன்னுடைய மகனான அர்ஜுன் கபூரை நடிக்க வைக்க முடிவு எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.