நடிகர் கமல்ஹாசன் படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய வில்லனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவர் தற்போது மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களான ராம்சரனின் கேம் சேஞ்சர் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

இதில் ராம்சரனின் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் படம் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வில்லனாக பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடுத்திருப்பதாகவும், அவருக்கான படப்பிடிப்புகளை அவர் நிறைவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சமீபத்திய பேட்டியில் எஸ் ஜே சூர்யா தான் ஒரு பெரிய படத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு இருந்ததும் இப்படத்தை தான் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த தகவல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.