S J Maanaadu Movie Update

மாநாடு முழுக்க ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான் என சூப்பரான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ் ஜே சூர்யா.

S J Maanaadu Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாநாடு.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க எஸ் ஜே சூர்யா பாரதிராஜா மனோஜ் பாரதிராஜா என பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது எஸ் ஜே சூர்யா இப்படம் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மாநாடு படத்தை போல எந்த திரைக்கதை கொண்ட படமும் வந்ததில்லை. இந்த படம் முழுக்க ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.