மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி இஷா குப்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

RuthraThandavam Movie Review : நேர்மையான அநியாயத்தைக் கண்டால் உடனே பொங்கும் காவல் அதிகாரியாக ரிச்சர்ட் ரிஷி ருத்ர பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் போதை பொருட்களை கடத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கிறார். அதன் பின்னர் வில்லனாக நடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் சூழ்ச்சியால் கொலை வழக்கு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இவருடைய தலையில் பதிப்பாக அதன் பின்னர் அந்த வழக்கில் இருந்து தன்னை நிரபராதி என எப்படி நிரூபித்தார் அதன்பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

இன்றைய ராசி பலன்.! (1.10.2021 : வெள்ளிக் கிழமை)

ஜெயித்ததா ருத்ர தாண்டவம்?? முழு விமர்சனம்‌.!!

படத்தை பற்றிய அலசல் :

ரிச்சர்ட் ரிஷி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து கொடுத்துள்ளார். திரௌபதி படத்தை காட்டிலும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு கொஞ்சம் தேறியுள்ளது. ‌‌‌‌‌

வழக்கறிஞராக வரும் ராதாரவி நான் தலித் என்றாலும் என்னுடைய வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகைப்படம் இருக்கிறது என கூறுகிறார். அம்பேத்கரை ஜாதி தலைவராக மாற்றி விட்டதாக கூறுகிறார். இது போன்ற காட்சிகள் கைதட்டல் வாங்குகிறது.

வில்லனாக நடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் அவருடைய பல வில்லன்களைப் போல டயலாக்குகளை சரசரவென பேசுகிறார். ரிச்சர்ட் ரிஷியின் மனைவியாக நடித்துள்ளார் தர்ஷா குப்தா அவருடைய கதாபாத்திரத்தை அழகாக நடித்துள்ளார்.

Trailer-ல இருக்குற அளவுக்கு ஒன்னுமே இல்ல – Rudra Thandavam Public Review

போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் அவர்களது குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை மிகவும் யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளார் இயக்குனர். ‌‌

படத்தின் பின்னணி இசை சில சமயங்களில் அசுரன் படத்தை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தம்ஸ் அப் :

படத்தின் கதைக்களம்

போதை மருந்து கடத்தல் பற்றி பேசியது

தம்ஸ் டவுன் :

வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

ஒற்றைச் சார்பு கதைபோல செல்வது.