Ruthra Thandavam Movie Update

திரௌபதி பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ruthra Thandavam Movie First Look : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த இரண்டு படங்களிலும் நாயகனாக தல அஜீததின் மச்சான் ரிச்சர்ட் நடித்திருந்தார்.

தற்போது மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் ஒரு திரைப் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் தலைப்பும் நிச்சயம் பரபரப்பைக் கிளப்பும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் நேற்று படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதாவது இப்படத்திற்கு ருத்ர தாண்டவம் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத பார்த்த ரசிகர்கள் இனிமேல் திரைத்துறையில் எங்கள் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்…

#ருத்ர_தாண்டவம் #மோகன்ஜிசத்ரியன் என கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.