Russia Introduce 1st Corona Vaccine
Russia Introduce 1st Corona Vaccine

Russia Introduce 1st Corona Vaccine : ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அந்த மருந்து சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் தனது மகளுக்கு அந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூட்டத்தில் புது கூறியதாவது:

இந்த தடுப்பு மருந்து, கொரோனா நோய் தொற்றிலிருந்து மிக சிறப்பான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை நீண்ட நாட்கள் உடலின் உருவாக்கும். மேலும், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது, சர்வதேச மிகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகும்.

சோதனை முறையில் அந்த மருந்து எனது மகளுக்கு செலுத்தப்பட்டது. முதல்முறையாக அந்த மருந்து செலுத்தப்பட்டது தொடர்ந்து, அவரது உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக (100.4 டிகிரி பாரன்ஹீட்) இருந்தது.

மறுநாள் அது, 98.6 டிகிரிக்கு சற்று அதிகமாக இருந்தது. இரண்டாவது முறையாக அந்த மருந்து செலுத்தப்பட்ட பிறகும், எனது மகளின் உடல் வெப்பம் மிதமாக அதிகரித்தது. ஆனால் பிறகு அது சாதாரணமாகிவிட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

அதே நேரம், அவரது உடலில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றல் அதிகரித்துள்ளது. அந்த தடுப்பு மருந்தை ஏற்படுத்தும் கொரோனா எதிர்ப்பாற்றல் நிலையாக உள்ளது.

நாடுகள் சுயநலம் காட்டினால் கொரோனாவை வீழ்த்த முடியாது: WHO எச்சரிக்கை!!

இந்த மருந்தை கண்டறிவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளை சேர்ந்த நிபுணர்களும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிவதில் வெற்றி அடைவார்கள் என்று நம்புகிறேன்.

இந்தத் தடுப்பு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுத்தும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் என சமூகப் பணியாற்றும் நபர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளின் தரப்பிலிருந்து, ரஷ்யா மூன்றாவது கட்ட பரிசோதனை செய்யாமலே அவசர அவசரமாக தடுப்புமருந்தை வெளியிட்டது சரிதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.