வெந்து தணிந்தது காடு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தையின் நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல்வேறு படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை பெற்றார். இதனையடுத்து ஹீரோவாக நடிக்க தொடங்கிய சிம்பு தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

பெரிய சறுக்கலுக்கு பிறகு மாநாடு என்ற படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்த சிம்பு நடிப்பில் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் சென்சார் முடிவடைந்து யூ ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் எனவும் தெரியவந்துள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக பத்து தலை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.