Running Time Details of Annathae and Enemy Movie

தீபாவளிக்கு பத்திபடம் உள்ள அண்ணாத்த மற்றும் எனிமி படங்களின் ரன்னிங் டைம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Running Time Details of Annathae and Enemy Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த மற்றும் விஷால் நடிப்பில் எனிமி ஆகிய திரைப்படங்கள் வரும் தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் தேடுதல் வேட்டை : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தீபாவளிக்கு போட்டி போடும் அண்ணாத்த மற்றும் எனிமி படத்தின் ரன்னிங் டைம் என்ன தெரியுமா? இதோ விவரம்

இந்த இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இவை மட்டுமல்லாமல் மாநாடு திரைப்படமும் தீபாவளி தினத்தில் வெளியாக இருந்த நிலையில் திடீரென அதன் ரிலீஸ் தேதி நவம்பர் மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Cinema பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட Fashion Show 2021 | Tiki Tako Grand Launch | HD

இந்த நிலையில் தற்போது அண்ணாத்த மற்றும் எனிமி ஆகிய இரண்டு படங்களில் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு படங்களுக்கும் தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் தான் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் அண்ணாத்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எனிமி திரைப்படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது.