
பிரபல நடிகர் சரத்பாபு மரணமடைந்ததாக வெளியான தகவலுக்கு அவரது தங்கை விளக்கம் அளித்துள்ளார்.
Rumour About Sarath Babu Health Status : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு வலம் வந்தவர் மனோபாலா. கிட்டத்தட்ட 15 நாட்களாக உடல் நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோபாலாவின் மறைவு தமிழ் திரை உலகில் சோகத்தில் ஆழ்த்தியது.
பிரபல நடிகராக வலம் வந்த சரத்பாபு அவர்கள் தான் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார் என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இது உண்மையில்லை, அவர் குணமடைந்து வருகிறார் விரைவில் வீடு திரும்புவார் என அவரது சகோதரி விளக்கம் அளித்துள்ளார்.