crackers

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை பாயும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், 2 மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கியது.

இதைத்தொடந்து, காலை 6 மணிமுதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வருடம் பொதுமக்கள் அதை கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.