Rs 2000 scheme today
Rs 2000 scheme today

Rs 2000 scheme today – சென்னை: வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000, சிறப்பு நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

கஜா புயல் மற்றும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதி பாதிக்கப்பட்டோருக்கு உதவ வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேலும் நகர்பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கும் இந்த 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இதன் மூலம், நகர்பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் பேருக்கும், கிராமப்பகுதிகளில் ‌வசிக்கும் 35 லட்சம் பேருக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படும் என்றும்.

மேலும் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.2000 செலுத்தப்படும் என்றும் கூறினார்.