தென்னிந்திய சினிமாவிலேயே முதல் முறையாக புதிய சாதனை படைத்துள்ளது ரவுடி பேபி பாடல்.

Rowdy Baby Song Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுவது மட்டுமல்லாமல் இவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றாவது மாபெரும் வெற்றியை பெறுகிறது. வை திஸ் கொலைவெறி பாடல் முதல் பல்வேறு பாடல்கள் யூட்யூபில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளன.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய சாதனையை படைத்தது. தற்போது இந்த பாடல் புதிய சாதனையாக யூடியூபில் 5 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.

உலகிலேயே மிக இனிமையானது எது

தென்னிந்திய சினிமாவில் அதிக லைக்குகள் பெற்ற பாடலாக ரவுடி பேபி பாடல் இடம் பிடித்துள்ளது. இந்த சாதனையால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மாரி 2 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தான் எனக்கு முதல் தடவை! – Actress Meenakshi Speech | Sivappu Manithargal Movie | HD