பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து ரோஷ்நி ஹரிப்ரியன் விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Roshini Haripriyan Releave From Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் தனித் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் இருவரிடமும் ஒவ்வொரு குழந்தைகள் என இரண்டு குழந்தைகள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றன.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகல்? புதிய கண்ணம்மாவாக நடிக்க போவது யார்??

பாரதியிடம் வளரும் ஹேமாவிற்கு கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரியாது. கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என தெரியாது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷ்நி ஹரிப்ரியன் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே அவர் கண்ணம்மாவாக சீரியலில் தொடர்வார். அதன் பிறகு இவருக்கு பதிலாக வேறொருவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.