மாடர்ன் உடையில் கருப்பு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா ரோஷனி ஹரிப்பிரியன்.

Roshini Haripriyan in Modern Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரோஷினி ஹரிப்ரியன்.

மாடர்ன் உடையில் கருப்பு தேவதையாக ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி - வைரலாகும் புகைப்படங்கள்.!!

இந்த சீரியல் மூலம் தனக்கென ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுள்ளார். கருப்பு நிறத்தழகி என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடங்கி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதழ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.