Rohit Sharma Rested
Rohit Sharma Rested

Rohit Sharma Rested – டி – 20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் விளையாட உள்ள இந்திய அணி நாளை மறு தினம் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் அந்த போட்டியில் ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு ‘டி-20’, மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கு பெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.

உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் இறுதி சர்வதேச தொடர் இது என்றாலும் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அவர்களின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு அளிக்கப்படலாம்.

முன்பு நடந்த நியூசிலாந்து தொடரில் கோலி, முகமது ஷமி இருவருக்கும் சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது.

இளம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு முழு ஓய்வில் உள்ளார்.

இந்திய முன்னணி வீரர்களின் பணிச்சுமை குறித்து தேர்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

போட்டிகள் மற்றும் தொடருக்கு இடையே போதிய ஓய்வு தர வேண்டும் என்பது எல்லோரும் கருத்தில் கொண்டு இருக்கிறோம். இதனால் தான் நியூசிலாந்து தொடரில் கோலிக்கு 5 போட்டிகளில் ஓய்வு தரப்பட்டது.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள ‘டி-20’ தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்படலாம். ஒருநாள் தொடருக்கான அணியில் சோதனை முயற்சிகள் செய்ய இயலாது.

அதனை தொடர்ந்து உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்புக்கு வழி ஏற்படுத்தி, அவர்கள் எழுச்சி பெற்றுவிடாமலும் பார்த்துக் கொள்ளப்படும்.

இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் களமிறங்கும். இதனால் ஓய்வு என்ற பெயரில் அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்வோம்.

இப்போதைக்கு இருக்கும் நிலையில், இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் இடையே ஆரோக்கியமான போட்டி காணப்படுகிறது.

கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்ப வாய்ப்பு உண்டு.

பும்ரா, புவனேஷ்வர், முகமது ஷமி, கலீல் உள்ளிட்ட நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வு தர வேண்டிய அவசியமில்லை. சுழற்சி முறையில் பயன்படுத்துவோம்.