Rohit Sharma is The Right Choice :

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கி விளையாடி வந்தனர்.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முரளி விஜய், கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதன்பின் மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களம் இறங்க இருந்தனர். பிரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுலுக்கு மீண்டும் தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கங்குலி தெரிவித்தது :

இ‌ந்த நிலை‌யி‌ல் உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்திய பின், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என்று நம்பினேன். ரகானே மற்றும் ஹனுமா விஹாரி 5-வது மற்றும் 6-வது இடத்தை கெட்டியாக பிடித்துவிட்டனர். மிடில் ஆர்டர் வரிசையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்ய முடியாது.

தல தளபதி இடையே இப்படி ஒரு நட்பா – ரசிகர்களும் இது போன்று இருந்தால் நன்றாக இருக்குமே.!

தொடக்க இடங்களில் இன்னும் முன்னேற வேண்டிய நிலை உள்ளது. மயாங்க் அகர்வால் ஆட்டம் சிறப்பாக இருப்பது போல் தோன்றுகிறது.

ஆனால் அவருக்கு இன்னும் அதிகாமான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது அவசியம். கேஎல் ராகுல் ஏமாற்றம் அளித்து வருகிறார். இதனால் தொடக்கத்தில் வெற்றிடம் உள்ளது’’ என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.