Rohit Sharma gives gift to injured fan : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

Rohit Sharma gives gift to injured fan :

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வங்க தேசத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர் ரசிகை ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்தியது.

அவரை நேரில் அழைத்து நலம் விசாரித்த ரோஹித் சர்மா, அவருக்கு தனது தொப்பியை ஆட்டோகிராஃப் போட்டு பரிசாக வழங்கினார்.

ரோஹித் சர்மாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வங்க தேசத்திற்கு எதிராக பர்மிங்ஹாமில் இந்திய அணி முக்கிய போட்டியை எதிர்கொண்டது. இதில் ரோஹித் சர்மா சதம் அடித்தார்.

ரோகித் சர்மாவை கோபப்டுத்திய ஆஸ்திரேலியா வீரர்!

அவரது 104 ரன்கள் உதவியால் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது. அவர் அடித்த சிக்ஸர் ஒன்று மீனா என்ற பெண்ணின் முகத்தில் விழுந்து பலத்த காயத்தை ஏற்படுத்தியது.

இதை ரோஹித் சர்மா கவனித்துக் கொண்டார். ஆட்டம் முடிந்த பின்னர் ரசிகை மீனாவை நேரில் அழைத்து அவரிடம் ரோஹித் நலம் விசாரித்தார். இதையடுத்து தனது தொப்பியில் ஆட்டோகிராஃப் போட்டு அதனை ரசிகை மீனாவுக்கு ரோஹித் பரிசாக வழங்கினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.