Roger Federer : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship, Sumit Nagal

Roger Federer :

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், முன்னணி வீரர் ரோஜர் பெடரரை இந்திய வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.

தொடக்கத்தில் மிகவும் உற்சாகமாக ஆடிய சுமித் நாகல், ரோஜர் பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். ஓரிரு பாயிண்டுகளை பெடரர் சொதப்பினார்.

இந்த பிக் பாஸ் எவிக்ஷனில் வெளியேறப்போவது யார்? – வைரலாகும் ஓட்டிங் நிலவர புகைப்படம்.!

இதனை பயன்படுத்தி முன்னேறிய சுமித் நாகல், முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அபாரமாக விளையாடிய பெடரர் 2வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.

இருந்தும் இந்த செட்டில் சுமித் நாகல் சிறப்பாக விளையாடினார். ரோஜர் பெடரர் தேவையற்ற வகையில் 33 தவறுகளை செய்த நிலையில், சுமித் நாகல் 19 தவறுகளையே செய்திருந்தார். அதன்பின்னர் மூன்றாவது செட்டையும் பெடரர் கைப்பற்றினார்.

1998ம் ஆண்டில் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் அமெரிக்க ஓபன் பிரதான சுற்றில் பங்கேற்ற பிறகு இப்போதுதான் 2 இந்திய வீரர்கள் சுமித் நாகல், பிரஜ்னேஷ் ஆகியோர் பிரதான சுற்றில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.