மாதவனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.

இந்திய திரை உலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ராக்கெட்ரி. இந்த படத்தில் மாதவனின் மனைவியாக சிம்ரன் மற்றும் முக்கியமான கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்துள்ளனர்.

புல்லரிக்க வைக்கும் கதை.. மாதவனின் ராக்கெட்ரி படம் எப்படி இருக்கு? - இதோ விமர்சனம்.!!

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமான இந்த படத்தில் நம்பி நாராயணாக மாதவன் நடித்துள்ளார். படத்தில் அப்துல் கலாம் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன. மிக மிக குறைந்த செலவில் liquid Fuel கொண்டு இயங்க கூடிய எஞ்சினை தயாரிக்க வேண்டும் என்பது நம்பி நாராயணனின் கனவு. இவருக்கு நாசாவில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்கும் இந்தியாவுக்காக தன்னுடைய உழைப்பை கொடுக்க வேண்டும் என இஸ்ரோவில் வேலைக்கு செல்கிறார்.

மிக குறைந்த விலையில் என்ஜினை உருவாக்க குழு ஒன்றை அழைத்துக் கொண்டு பிரான்ஸ் என்று அங்கு இருக்கும் விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் அவர்களின் யுத்தியை தெரிந்து கொண்டு வெறும் 60 லட்சம் ரூபாய் செலவில் இன்ஜினை தயாரிக்கிறார். இஸ்ரோவின் இயக்குனராக வர வேண்டிய நம்பி திடீரென போலீசாரால் கைது செய்யப்பட அவருடைய குடும்பம் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

புல்லரிக்க வைக்கும் கதை.. மாதவனின் ராக்கெட்ரி படம் எப்படி இருக்கு? - இதோ விமர்சனம்.!!

மாதவன் இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை திறமையான நபர் என மீண்டும் நிரூபித்துள்ளார். கெஸ்ட் ரோலில் வரும் சூர்யா மாதவனின் மனைவியாக நடித்த சிம்ரன் உள்ளிட்டோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

படத்தின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை என அனைத்தும் கட்சிதம்.