Robots Teach
Robots Teach

Robots Teach – கல்வி கற்கும் முறையில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் நாதிபாளையத்தில் ₹13.20 கோடியில் வணிகவளாகம் அமைப்பதற்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

விழாவை துவக்கி வைத்த பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

கல்வித் துறையை பொருத்தவரை ₹2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 25 ஆயிரம் பள்ளிகளில் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்களை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘கல்வி கற்கும் முறையில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் துவக்கி வைப்பார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆசிரியர்கள் வருகையை இனி தொடர்ந்து கண்காணிக்க முடியும்..இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here