பிக் பாஸ் சீசன் 3-க்கு வனிதா என்று சொன்னால் சீசன் 6-க்கு அவருடைய நண்பர் தான் டிரெண்ட்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

சீசன் 3-க்கு வனிதா.. சீசன் 6 -க்கு வனிதாவின் முன்னாள்...? சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலம் - யார் அவர் தெரியுமா??

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த முறையும் பல விஜய் டிவி பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா 2 சீரியல் நடிகை ஆயிஷா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சிம்பு என பல நடிகர்களை நடனத்தில் திக்கு முக்காட வைத்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

சீசன் 3-க்கு வனிதா.. சீசன் 6 -க்கு வனிதாவின் முன்னாள்...? சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலம் - யார் அவர் தெரியுமா??

ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்து தோல்வியை சந்தித்த வனிதா அடுத்ததாக ராபர்ட் மாஸ்டரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறி வந்தனர். ஆனால் இவரது இந்த காதலும் பிரேக்கப்பில் முடிந்தது. இந்த நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.