RK Suresh Wife in Baby Shower Function

லண்டன் சமயத்தில் மிக மிக ரகசியமாக ஆர்கே சுரேஷ் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவரது மனைவிக்கு ஊரறிய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

RK Suresh Wife in Baby Shower Function : தமிழ் சினிமாவில தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் பாலாவால் வில்லனாக அவதாரம் எடுத்து தற்போது ஹீரோவாகவும் நடித்து வருபவர் ஆர்கே சுரேஷ். தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சின்னத்திரை நடிகர் ஒருவருக்கும் திருமணமாக இருந்த நிலையில் இவர்களது திருமணம் சில காரணங்களால் நடைபெறாமல் நின்று போனது. இதனையடுத்து ஆர்கே சுரேஷ்க்கு கடந்த லாக் டவுனில் தயாரிப்பாளர் மது என்பவருடன் ரகசியமாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஆர் கே சுரேஷின் மனைவியின் வளைகாப்பு சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

பல திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.