Billa Pandi

Billa Pandi : தல ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜயின் சர்கார் படம் வரும் தீபாவளி 6 முதல் திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன் தல ரசிகனாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படமும் நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த பில்லா பாண்டி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தது. ட்ரைலரின் கட் சரியாக இல்லாமல் இருந்ததால் எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து இருந்தது.

இதனால் தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் ட்ரைலர் அவசரமாக கட் செய்து வெளியிட்டோம்.

YouTube video

ட்ரைலரை மட்டும் அழகாக காட்டி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. படம் முழுவதும் நன்றாக வந்துள்ளது.

நிச்சயம் படம் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் சர்கார் பெரிய படம் தான். அந்த படத்துடன் ஒப்பிடும் போது பில்லா பாண்டி படம் சிறிய பட்ஜெட் படம் தான் என கூறியுள்ளார்.

ஆனாலும் எங்களுக்கு படத்திற்கும் ஆதரவு கொடுங்கள் என கூறியுள்ளார்.

ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ இதோ..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.