Rk Suresh About Valimai Teaser

விரைவில் வலிமை படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக படத்தின் ரிலீஸ் குறித்த தகவலையும் பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார்.

Rk Suresh About Valimai Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் : 20-ந்தேதிவரை, தோஷ நிவர்த்தி பூஜை

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் சிங்கிள் ட்ராக் மட்டும் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் வெகு விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் அல்லது தீபாவளிக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தல தீபாவளி என குறிப்பிட்டு இருப்பது மட்டுமல்லாமல் வெகுவிரைவில் டீசர் எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.

நாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு! | Vadivelu, Suraj | Lyca