RK Selvamani About Cinema Shooting

மே 31-ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் நடக்காது என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

RK Selvamani About Cinema Shooting : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் என் இரண்டாவது அல்ல இந்தியாவின் அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

தமிழகத்தில் ஒரு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 15 நாட்களுக்கு மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

Vishal, Arjun, Samantha At The Irumbuthirai Success Meet

இந்த நிலையில் ஆர்கே செல்வமணி அளித்த செய்தியாளர் சந்திப்பில் வரும் மே 31-ஆம் தேதி வரை எந்த ஒரு படபிடிப்பும் நடைபெறாது என அறிவித்துள்ளார். மேலும் பெப்ஸி அமைப்பிலுள்ள தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக திரையுலக பிரபலங்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே தல அஜித் பெப்ஸி அமைப்புக்காக ரூபாய் 10 லட்சம் நிதி அளித்துள்ளார். அதேபோல் மணிரத்னம் அவர்களும் ரூபாய் 10 லட்சம் நிதி அளித்து இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மே 31-ஆம் தேதி வரை எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாது என்பதால் சீரியல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது பழைய சீரியல்கள் தொலைக்காட்சி சேனல்களில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.