RK Nagar Released in Netflix
RK Nagar Released in Netflix

தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஓ டி டி வழியாக முதல் தமிழ் படம் வெளியாகியுள்ளது.

RK Nagar Released in Netflix : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறை உட்பட அனைத்துத் துறைகளும் அடங்கியுள்ளன.

இப்போதைக்கு வலிமை ரிலீஸ் பிளான் இது தான் – அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லேட்டஸ்ட் தகவல்.!

தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில தயாரிப்பாளர்கள் படத்தை நேரடியாக OTT வழியாக இணையத்தில் வெளியிட முடிவு செய்தனர்.

முதன்முதலாக சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT வழியாக வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு பூதாகரமாக வெடித்து இருந்த நிலையில் அதற்குள் வெங்கட்பிரபு இயக்கத்தில் வைபவ் நடித்திருந்த ஆர்.கே நகர் திரைப்படம் நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகியுள்ளது.