RJ Vinoth in Bigg Boss 5

பிக் பாஸ் சீசன் 5-ல் பிரபல ஆர்ஜே ஒருவர் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

RJ Vinoth in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் ஐந்தாவது சீசனை சிம்பு தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கவும் பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நகுல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் முதல் பங்கேற்கப் போவதில்லை என உறுதிபடுத்தினார்.மேலும் குக் வித் கோமாளி கனி மற்றும் சுனிதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஜேவும் பிளாக் ஷீப் யூடியூப் சேனலின் நிறுவனருமான வினோத்தும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.