RJ Balaji Next Movie Update

ரூபாய் 220 கோடி கலெக்ஷன் செய்த படத்தை ஆர்.ஜே பாலாஜி ரிமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RJ Balaji Next Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜேவாக பணியாற்றிய இவர் எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலமாக இயக்குனராக கால் பதித்தார்.

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பதாய் ஹோ.

முழுக்க முழுக்க காமெடி படமாக 29 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ரூபாய் 220 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்தது.

இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது.