ஆர்.ஜே பாலாஜியின் குடும்பத்திற்குள் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
RJ Balaji Mom Affected by Corona : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக நடித்து வருபவர் ஆர்ஜே பாலாஜி. பிரபல வானொலி சேனலில் ஆர்.ஜே-வாக பணியாற்றிய இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் சென்னை முழுவதும் அதி தீவிரமாக பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வனிதா வீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய தளபதி விஜய்.. இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்
இந்த வைரஸ் திரையுலக பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜியின் அம்மா இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு கொரோனா தொற்று உறுதியான பிறகு அமிஞ்சிகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.