ரன் பேபி ரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ஆர்ஜே பாலாஜியின் பேட்டி வைரலாகி வருகிறது.

ஆர் ஜே வாக பயணத்தை தொடங்கி தற்போது பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருபவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. முதலில் காமெடியனாக பல படங்களில் நடித்து வந்த இவர் எல் கே ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படம் நல்ல வரவைப்பை பெற்றிருந்ததை தொடர்ந்து பாலாஜி தற்போது ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரன் பேபி ரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பேட்டியில் இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!!.. வைரலாகும் தகவல் இதோ.!

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ராதிகா, ஸ்ம்ருதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்து பேசிய ஆர் ஜே பாலாஜியின் பேட்டி வைரலாகி வருகிறது.

பேட்டியில் இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!!.. வைரலாகும் தகவல் இதோ.!

அதில் அவர், சமீபகாலமாக படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களை விட இளைஞர்கள் பாக்ஸ் ஆபிஸில் மும்முரம் காட்டுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஒரு உயிரே போய்விட்டது. இது இளைஞர்களுக்கு தேவையில்லாத ஒன்று, இதனால் அவர்களுக்கு நேரம் தான் வீணாக போகிறது. படம் வெளியாகும் போது நல்லா இருக்கிறதா, இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். பாக்ஸ் ஆபிஸ் காலக்ஷன் எல்லாம் படக்குழுவினர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.