Mookuthi Amman 2

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை ஆர் ஜே பாலாஜி உறுதி செய்துள்ளார்.

RJ Balaji Confirm Mookuthi Amman2 : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த வருடம் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி பெரும்வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் போது ஆர் ஜே பாலாஜி காதில் ரகசியம் ஒன்றை கூறுவார். அது என்ன என்பதை தற்போது வரை அவர் கூறவில்லை.

இந்த நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர் அது என்ன ரகசியம் என பாலாஜியிடம் கேட்க அதற்கு அவர் பார்ட் 2வில் சொல்கிறேன் என கூறி இரண்டாம் பாகம் உருவாவதை உறுதி செய்துள்ளார். இதனால் மூக்குத்தி அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்ப்பர்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.