கதை தந்த வாய்ப்பு கொடுத்த தளபதி விஜய்யை காக்க வைத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை பல நடிகர் நடிகைகளுக்கு உண்டு. அதேபோல் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா என வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் இயக்குனர்கள் எக்கச்சக்கம்.

கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த விஜய்.. காக்க வைத்த ஆர் ஜே பாலாஜி - தளபதி 77 கூட்டணி ரெடியா?

இப்படியான நிலையில் ஆர் ஜே பாலாஜியிடம் கதை கேட்டு உள்ளார் நடிகர் விஜய். ஆமாம் இது குறித்து ஆர் ஜே பாலாஜியே நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் விஜய்க்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். ஒன் லைன் ஸ்டோரியை 40 நிமிஷம் விவரித்து சொல்ல விஜய்க்கும் கதை பிடித்துப்போய் எப்போ முழு கதையை ரெடி ஆகும் என கேட்க கதை ரொம்ப முக்கியம் ஆகையால் காலதாமதமாகும், குறைந்தது ஒரு வருஷமாவது ஆகும் என தெரிவித்துள்ளார்.

சரி கதையை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க கண்டிப்பா படம் பண்ணலாம் என விஜய் தெரிவித்துள்ளார். அதுவும் அந்த படம் மூக்குத்தி அம்மன் படத்தை போல காமெடியாகவும் கருத்து உள்ளதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஆர் ஜே பாலாஜி கதையை உருவாக்க காலதாமதமாகும் தளபதி 77 அல்லது 87 எதுவாக இருந்தாலும் பரவாயில்லை கண்டிப்பாக உங்களுடன் படம் பண்ணுவேன் என தெரிவித்துள்ளார்.

கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த விஜய்.. காக்க வைத்த ஆர் ஜே பாலாஜி - தளபதி 77 கூட்டணி ரெடியா?

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் விஜய், ஆர் ஜே பாலாஜி கூட்டணி உருவாவது உறுதி என தெரிகிறது.