Riythvika Takes Corona Vaccine

கொரோனா தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட ரித்விகா கொடுத்த ரியாக்சன் கண்ணுல அவ்வளவு பயம் தெரியுது என கமெண்ட் அடிக்க வாய்ப்புள்ளது.

Riythvika Takes Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் ரித்விகா கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இவர் தடுப்பூசி போடும் போது ஊசிக்கு பயந்து கண்களை கெட்டியாக மூடிய புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகியுளளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஊசியினா அவ்வளவு பயமா? என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.