Riyaz Khan About His Marriage
Riyaz Khan About His Marriage

எனக்கும் அம்மாவுக்கும் இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சு என மகனை வைத்துக்கொண்டே பேட்டியில் கூறியுள்ளார் ரியாஸ் கான்.

Riyaz Khan About His Marriage : தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் ரியாஸ் கான். மேலும் இவர் நந்தினி சீரியலில் லேடி கெட்டப்பில் நடித்து வந்தார்.

நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் ஷாரிக்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷாரிக்.

மேலும் இவர் பென்சில் படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். தற்போது ரியாஸ் கான் தன்னுடைய மகன் ஷாரிக் உடன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

தன்னை இயக்கிய இயக்குனர்களுக்கு ஆளுக்கு 5 லட்சம் கொடுத்த தளபதி விஜய், பலருக்கும் தெரியாத சம்பவம் – இது எப்போ நடந்துச்சு தெரியுமா?

அந்தப் பேட்டியில் தனக்கும் உமாவுக்கும் திருமணம் நடந்தது குறித்து பேசியுள்ளார். திருமணத்தன்று திடீரென பிரச்சனை ஏற்பட்டு விட்டது‌. இதனால் வேறு வழியில்லாமல் உன் அம்மாவை கடத்திச் சென்று தான் திருமணம் செய்தேன்.

ஷாரிக் பிறந்தவுடன் தான் இரண்டு குடும்பமும் ஒன்றாக சேர்ந்தோம். அதனால் தான் அனைவரும் ஷாரிக்கை மிகவும் செல்லமாக வளர்த்தோம் என கூறியுள்ளார்.

உமா ரியாஸ்கான் திரையுலகில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருவது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.