Ritika Singh Pair With Vijay Antony

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ritika Singh Pair With Vijay Antony : தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் அடுத்ததாக காக்கி, கோடியில் ஒருவன், அக்னி நட்சத்திரம், பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

கோடியில் ஒருவன் என்ற திரைப்படம் ஜூன் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் ஆண்டனி அடுத்ததாக விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரத்திகா சிங் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.