உதட்டின் கீழ் பூக்கள்  வைத்து இருப்பது போல் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும்  ரித்திகா சிங்கின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கிறங்கடித்துள்ளது.

தமிழில் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். இப்படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக எதார்த்தமான  நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருப்பார். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தவர்தான் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

உதட்டின் கீழ் பூக்களை வைத்து போஸ் கொடுக்கும் குத்துச்சண்டை வீராங்கனை - கிறங்கிப்போன ரசிகர்கள்.!!

அதனைத் தொடர்ந்து இவர் வரிசையாக சில படங்கள் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் ‘ஓ மை கடவுளே’ இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து இவர் ‘டேய்’ என்ற ஆல்பம் பாடலுக்கு மிக கிளாமராக நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

உதட்டின் கீழ் பூக்களை வைத்து போஸ் கொடுக்கும் குத்துச்சண்டை வீராங்கனை - கிறங்கிப்போன ரசிகர்கள்.!!

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங். அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது புதுவிதமாக தனது உதட்டின் அருகில் பூக்கள் வைத்து கொண்டு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் மனதை கிறங்கடித்துள்ளது.