பிரபல நடிகருக்கு பையனா நடிக்க ஆசைப்படும் யூடியூப் பிரபலம் ரித்து ராக்ஸ் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூடியூபில் பிரபலமாக இருக்கும் சிறுவர்களில் ஒருவர்தான் ரித்து. 7 வயது ஆகியுள்ள இச்சிறுவன் rithu rocks என்ற யூடியூப் சேனலில் வித்தியாசமான கெட்டப்பில் வீடியோக்களை பதிவிட்டு  முன்னணி பிரபலமாக இணையதளத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் சிறுவன் ரித்துவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் முதல் படமாக நயன்தாராவிற்கு மகனாக o2 என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். 

இப்படம் வரும் 17ஆம் தேதி ott தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிறுவன் ரித்துவை பேட்டி எடுத்து உள்ளனர். அதில் பேசிய ரித்து. நயன்தாரா மேம் உடன் இணைந்து நடித்தது ரொம்பவும் ஹாப்பியா இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் யூடியூப்ல நாங்கள் எடுக்கும் வீடியோவுக்கு சின்ன கேமராவும் 2 லைட் செட்டிங் வைத்துதான் எடுப்பாங்க ஆனால் இங்க பெரிய கேமரா மற்றும் நிறைய லைட் செட்டிங் வச்சி எடுத்தாங்க என்று கூறியுள்ளார். 

அதன்பின் அச்சிறுவன் நான் விஜய் சார் ரசிகனாக இருந்தாலும் எனக்கு அஜித் சாரையும் ரொம்ப பிடிக்கும் அவருடைய வலிமை படம் சூப்பரா இருந்துச்சு அதுல அஜித் சார் செய்த பைக் ஸ்டன்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு விஜய் சாரோட படத்துல அவருக்கு பையனா நடிக்கணும்னு ரொம்ப ஆசை என்று ரித்து அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.