24 வருடம் கழித்து விக்ரமை சந்தித்துள்ளதாக நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் ரிஷப் ஷெட்டி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசை அமைப்பிலும் உருவாகியுள்ளது.
மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து,பசுபதி, போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளன. இந்த படத்தை இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து பலர் கவனங்களை ஈர்த்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரவாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி, 24 வருடங்கள் கழித்து விக்ரமை சந்தித்துள்ளதாக நிகழ்ச்சியான பதிவை வெளியிட்டு உள்ளார்.
அந்தப் பதிவில் ,விக்ரம் சார் எனக்கு எப்போதும் பெரிய இன்ஸ்பிரேஷன், 24 ஆண்டுகள் கழித்து எனது ஹீரோவை நேரில் சந்தித்தது உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலி ஆன மனிதனாக என்னை உணர வைக்கிறது.என்னை போன்ற நடிகர்களுக்கு உந்துசக்தியாக இருப்பதற்கு மிகவும் நன்றி. தங்கலான் படத்துக்கு எனது வாழ்த்துக்கள், லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது