RIP Sujith
மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 26 அடியில் சிக்கி கொண்டான். அவனை மீட்பதற்காக கிட்டத்தட்ட 80 மணி நேரம் போராட்டம் நடந்தது.

ஆனால் அத்தனை முயற்சிகளும் தோல்விகளில் முடிந்தது. சுஜீத்தின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது.

சுஜீத்தின்உயிர் பரிதாபமாக பிரிந்தது ஒட்டு மொத்த இந்தியாவிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்களும் கண்ணீருடன் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.