RIP JK.Rithesh
RIP JK.Rithesh

RIP JK.Rithesh : நடிகரும் திமுகவின் முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் சற்றுமுன் இயற்கை எய்தினார்.

2009 முதல் 2014-ம் ஆண்டுவரை ராமநாதபுரம் தொகுதியின் திமுக எம்.பி-யாக இருந்த ரித்திஷ் 2014-ல் அதிமுகவில் தன்னை இணைத்துகொண்டார்.

மேலும் 2007-ம் ஆண்டு கானல்நீர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமான ரித்திஷ், நாயகன், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் முக்கியமான வேடத்தில் ரித்திஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவருடைய திடீர் மறைவு இவர் தொகுதி மக்களும் தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

YouTube video

இராமநாதபுரத்தில் உள்ள பரணிகுமார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது Kalakkal Cinema.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.