Rioraj Family Trip Photos

பிக் பாஸில் கமல்ஹாசனிடம் சொன்னதை நிறைவேற்றியுள்ளார் ரியோ ராஜ்.

Rioraj Family Trip Photos : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசனில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ரியோ ராஜ்.

இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று கருதப்படும் நிலையில் பிக்பாஸில் இறுதிக்கட்டம் வரை சென்றும் வெற்றி ஆகவில்லை.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய இவர் குடும்பத்துடன் காட்டுக்குள் ட்ரிப் போக உள்ளதாக கமல்ஹாசனிடம் கூறியிருந்தார்.

அதனை நிறைவேற்றும் வண்ணமாக தன் குடும்பத்துடன் ஜீப்பில் காட்டுக்குள் சென்றுள்ளார்.

ரியோ தன் மகளான ரிதி உடன் காட்டுக்குள் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.