Rio Vs Nisha in Bigg Boss House

நிஷாவிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளார் நடிகர் ரியோ ராஜ்.

Rio Vs Nisha in Bigg Boss House : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நான்காவது சீசன் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளவர் ரியோ. நிகழ்ச்சியில் விஜய் டிவியை சேர்ந்த நிஷா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

நிஷா மற்றும் ரியோ இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது வெளிவந்துள்ள காட்சி ஒன்றில் ரியோ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நிஷா அமர்ந்திருக்கும் காரை ஓட்டுவது என்பது மட்டுமல்லாமல் அவரது தலைமுடியை பிடித்து ஆட்டியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பெண்ணிடம் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வது என ரியோவின் நடத்தையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் அவர் விஜய் டிவி குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் இப்படியான சர்ச்சைக்குரிய காட்சிகள் டிவியில் ஒளிபரப்பபடாமல் நீக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.