Rio Raj Entry in Bigg Boss 4
Rio Raj Entry in Bigg Boss 4

பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக ரியோ ராஜ் நுழைந்துள்ளார்.

Rio Raj Entry in Bigg Boss 4 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது முதல் ஆளாக ரியோ ராஜ் உள்ளே நுழைந்தார்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர் சன் டிவி மூலமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். மேலும் வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.